
தொடர்ந்து இரண்டாவது நாளில் தங்கம் விலை சரிவு! வாங்க சரியான நேரம்;
செய்தி முன்னோட்டம்
தங்கம் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே விலைச்சரிவு கண்டுள்ளது. அதிலும் நேற்றைய தினத்தில் ஒரே நாளில் கடும் சரிவை சந்தித்தது தங்கம் விலை.
தங்கம் விலை பண்டிகைக் காலத்தையொட்டி தேவை அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால், பண்டிகைக் காலம் முடிந்தபின், கடந்த 2 நாட்களாக விலை கிராமுக்கு 22 ரூபாய் வரை குறைந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5295.00 என விற்பனையாகிறது.
அதேபோன்று, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 42360.00 என விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் சரிவு காரணம் என்ன?
வெள்ளியின் விலை பொறுத்தவரையில், டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.71,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.600 சரிந்துள்ளது.
சென்னையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.74,800 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினத்தின் விலையை விட ரூ.500 சரிந்துள்ளது.
எனவே, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு, போர் காரணமாக கடந்த ஆண்டில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனாலே, ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன் சரிந்தது.