இனி தப்பிக்கமுடியாது! Soundboxஐ அறிமுகப்படுத்திய கூகுள் பே
கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தளமாக உள்ளது. இந்த நிறுவனம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு செயலிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கூகுள் அதன் சொந்த யுபிஐ சவுண்ட்பாக்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த சவுண்பாக்ஸிற்கு 'Soundpod by Google Pay' என பெயரிட்டு தற்போது இந்தியாவின் தலைநகரான டெல்லி உட்பட வட இந்தியாவில் உள்ள சில கடைகளிடம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அமேசான் ஆதரவுடைய டோன் டேக் மூலம் ஒலி எச்சரிக்கை பெட்டி உருவாக்கப்படுகின்றன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் யுபிஐ ஒலி எச்சரிக்கை கருவிக்கு Soundpod by Google Pay என பெயரிட்டுள்ளனர்
'Soundpod by Google Pay' ஆனது வணிகர்களின் வணிகக் கணக்கிற்கான Google Pay கணக்குடன் உடன் இணைக்கப்பட்ட QR குறியீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்த வாடிக்கையாளர்கள் எந்த UPI அடிப்படையிலான பயன்பாட்டையும் பயன்படுத்தலாம். டிசம்பரில் 7.82 பில்லியனைத் தொட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, ரூ. 12.82 டிரில்லியனாக உயர்ந்ததால், 2022 ஆம் ஆண்டு, UPI புதிய ரெக்கார்டை பதிவு செய்துள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) தரவுப்படி, நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டிசம்பரில் பரிவர்த்தனைகளின் அளவு 7.12 சதவீதம் அதிகரித்துள்ளது.