ஹிண்டன்பர்க் அறிக்கையின் விளைவு! அதானி மதிப்பு மேலும் சரிவு
தொழிலதிபரான கெளதம் அதானி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், அதானி குழும பங்குகள் தொடர்ந்து கடும் சரிவினைக் கன்டு வருகின்றன. இதுவரை அதானி குழு பங்குகள் 132 பில்லியன் டாலா் அளவுக்கு சரிவடைந்துள்ளன. மேலும், கெளதம் அதானியின் நிகர மதிப்பு $50 பில்லியனுக்கு கீழே குறைந்தது. தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 49.1 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதுவே ஒரு மாதத்திற்கு முன்பு, 60 வயதான தொழிலதிபரின் நிகர மதிப்பு சுமார் 120 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின் 49 பில்லியனுக்கு வந்து நிற்கிறது.
கெளதம் அதானியின் பங்குகள் சரிந்து 50 பில்லியனை தொட்டுள்ளது
தொடர்ந்து இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா, அதானி குழுமத்திற்கு தொடர்ந்து கடன் கொடுக்க விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுபற்றி, பேங்க் ஆப் பரோடாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் சாதா தெரிவிக்கையில், அதானி குழும பங்குகளில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தினை பற்றி கவலையில்லை. வங்கிக்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில், கடன் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக போர்ப்ஸ் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.