
ககன்யான் ஏவுதல் பாதியிலேயே நிறுத்தம்: 10 மணிக்கு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது
செய்தி முன்னோட்டம்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ஓட்டம் திட்டமிடப்பட்ட 5 நொடிகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
முதலில் 8:00 மணிக்கு நடைபெறுவதாக இருந்த சோதனை, வானிலை காரணமாக 8:30 மணிக்கு மாற்றப்பட்டது.
பின் மீண்டும் 8:45 மணிக்கு வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
8:45 மணிக்கு மாற்றப்பட்ட சோதனை, கவுன்ட் டவுன் முடிய 5 நொடிகள் இருந்த நிலையில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மீண்டும் சோதனை நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ககன்யான் ஏவுகணையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், மனிதர்கள் இருக்கும் பகுதியை பத்திரமாக பிரித்து தரையிறக்கும் வகையில், கிரேவ் எஸ்கேப் சிஸ்டம் என்ற வடிவமைப்பை இஸ்ரோ என்று சோதனை செய்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
பிரச்சனைகள் கண்டறிந்து சரி செய்யப்பட்டது என இஸ்ரோ தகவல்
Reason for the launch hold is identified and corrected.
— ISRO (@isro) October 21, 2023
The launch is planned at 10:00 Hrs. today.