
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு!
செய்தி முன்னோட்டம்
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான PF வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்த இபிஎப்ஓ நிர்ணயித்துள்ளது.
கடந்த 2021-22 ஆண்டுக்கான EPFO வட்டி விகிதம் 8.1 சதவீதம் என இருந்தது. இவை கடந்த 40 ஆண்டில், குறைவானது என கூறப்பட்டது.
இதற்கு முன்பு வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5% ஆக இருந்தது. பின் 2022 ஆம் ஆண்டில் அதை குறைத்தனர்.
இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இடையில், வட்டி விகிதம் மாற்ற வேண்டும் என்று நடந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கு 8.15% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 5 கோடி சந்தாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
தொழிலாளர்களின் வைப்பு நிதி வட்டியை 8.15% ஆக உயர்த்தியுள்ளது EPFO
The 233rd meeting of Central Board of Trustees, EPFO, has recommended 8.15 per cent as rate of interest on Employees' Provident Fund deposits for 2022-23.
— Bhupender Yadav (@byadavbjp) March 28, 2023
Happy to share the interest rate of EPFO is higher than other comparable investments avenues available for subscribers. pic.twitter.com/8Ffa2CjTgl