Page Loader
கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?
மீண்டும் 25 புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுகிறதா?

கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா?

எழுதியவர் Siranjeevi
Mar 27, 2023
03:11 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில மாதங்களாகவே இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் கடன் வாங்கியவர்களின் நிலை பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. ஆனால், பிக்சட் டெபாசிட் செய்தவர்களுக்கு கொண்டாட்டமாக வட்டி உயர்த்தப்பட்டுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க பெடரல் வங்கி ஆனது 25 புள்ளிகள் உயர்த்தியது. தற்போது மீண்டும் இந்திய ரிசர்வ் வங்கி 25 புள்ளிகள் உயர்த்தப்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர். இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.5% அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து வட்டி விகித உயர்த்தப்பட்டாலும், இது கடைசி வட்டி விகித உயர்வாக இருக்கும் என பாங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொருளாதார நிபுணர் மதன் என்பவர் அறிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டிவிகிதம் மேலும் 25 புள்ளிகள் உயர்த்தப்படும் - நிபுணரின் கணிப்பு என்ன>

மேலும், இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவிக்கையில், கொரோனா தொற்று நோய் மற்றும் உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரத்திற்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. ஆனாலும், இந்திய பொருளாதார நிதி நிலை சீராக உள்ளது. ஆனால், பணவீக்கமும் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் உள்ளது என்று தெரிவித்து இருந்தார். தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டமானது ஏப்ரல் 3, 5, 6 ஆம் தேதிகளில் நடைப்பெற உள்ளது.