Page Loader
ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT! 
சாட்ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கும் எலான் மஸ்க்கின் TruthGPT

ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT! 

எழுதியவர் Siranjeevi
Apr 18, 2023
10:43 am

செய்தி முன்னோட்டம்

ட்விட்டர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனரான எலான் மஸ்க் சாட்ஜிபிடிக்கு போட்டியாக TruthGPT செயற்கை நுண்ணறிவை தொடங்கப் போவதாக கூறியுள்ளார். அந்த வகையில், பல வேலைகளை எளிதாக்கும் ஏஐ-யை தொழிலதிபர் எலான் மஸ்க் தொடங்க உள்ளார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில், "நான் 'TruthGPT' அல்லது உலகின் இயல்பைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அதிகபட்ச உண்மையைத் தேடும் ஒரு AI-யை தொடங்கப் போகிறேன்" என கூறியுள்ளார். மேலும், இவை பாதுகாப்பிற்கான சிறந்த பாதையாக இருக்கும் என நினைக்கிறேன். உலகத்தை புரிந்துகொள்ளவதில் அக்கறை கொண்ட ஏஐ, மனிதர்களை அழிப்பதில் சாத்தியமில்லை, ஏனென்றால் நாம் உலகின் ஒரு சுவாரஸ்யமான பகுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post