ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக மாற்றும் எலான் மஸ்க்! காரணம் என்ன?
ட்விட்டர் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தற்போது தனது ட்விட்டர் கணக்கை பிரைவேட்டாக்க முடிவு செய்துள்ளார். பிப்ரவரி 2023 நிலவரப்படி 127 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், அதிகமாக ஃபாலோ செய்யப்படுபவர்களில் இரண்டாவது நபராக மஸ்க் உள்ளார். தொடர்ந்து, அவர் தனது கணக்கை பிரைவேட்டாக மாற்றியதற்குக் காரணம், அவரது ட்வீட்களின் ரீச் மற்றும் ஈடுபாட்டை சோதனை செய்வதற்காக என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் "எனது பப்ளிக் ட்வீட்களை விட எனது தனிப்பட்ட ட்வீட்களை நீங்கள் அதிகம் பார்க்கிறீர்களா, என்பதை சோதிக்க நாளை காலை வரை எனது கணக்கை பிரைவேட்டாக மாற்றுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.