நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் புதிய AI கருவி
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருந்துகளை பரிந்துரைப்பதில் மருத்துவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவுக் கருவியான DrugGPT-ஐ உருவாக்கியுள்ளனர். நோயாளிகளின் மருந்து முறை பற்றிய புரிதலை மேம்படுத்தவும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. நோயாளியின் மருத்துவ நிலையை சாட்போட்டில் உள்ளிடுவதன் மூலம், சுகாதார வழங்குநர்கள் விரைவாக இரண்டாவது கருத்தைப் பெறலாம். இந்த கருவியின் ஆரம்ப பதிப்புகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் வரம்பை வழங்குவதோடு, சாத்தியமான பக்க விளைவுகளை பற்றியும் தெரிவிக்கின்றன. சில மருத்துவர்கள் தற்போது சாட்ஜிபிடி மற்றும் ஜெமினி போன்ற பிரபலமான ஜெனரேட்டிவ் AI சாட்போட்களை நோயறிதல் சரிபார்ப்பு மற்றும் மருத்துவக் குறிப்புகளை உருவாக்க பயன்படுத்துகின்றனர். எனினும், இந்த கருவிகள் தவறான தகவல் அபாயங்கள் காரணமாக உலகளாவிய மருத்துவ சங்கங்களால் அங்கீகரிக்கப்படாவில்லை.
புதிய AI கருவியை அங்கீகரிக்கும் மருத்தவ உலகம்?
இதற்கிடையே, அமெரிக்க மருத்துவ உரிமத் தேர்வுகளில் DrugGPT, மனித நிபுணர்களுடன் பொருந்துகிறது என்று ஆக்ஸ்போர்டின் AI ஃபார் ஹெல்த்கேர் ஆய்வகத்தின் திட்டத் தலைவர் பேராசிரியர் டேவிட் கிளிஃப்டன் மற்றும் அவரது குழு வலியுறுத்துகிறது. டேவிட் கிளிஃப்டன், இந்த புதிய AI கருவி அதன் பரிந்துரைகளுக்கான காரணங்களையும் வழங்குவதால், அதன் நம்பத்தன்மை அதிகரிக்கிறது என தெரிவித்தார். எனினும், இந்த கருவியின் செயல்பாட்டில், மனித தீர்ப்பு இன்னும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்த தவறவில்லை. இக்கருவியை, மருத்துவர் தனது ஆலோசனையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.