Loading...
மே 2027 முதல் அமலாகும் DPDP விதிகள்: இந்தியாவில் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கும் என அறிக்கை
இந்தியாவில் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கும் என அறிக்கை

மே 2027 முதல் அமலாகும் DPDP விதிகள்: இந்தியாவில் சைபர் பாதுகாப்பு வல்லுநர்களுக்கான தேவை அதிகரிக்கும் என அறிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2026
04:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு (DPDP) விதிகள் அமல்படுத்தப்பட உள்ளதைத் தொடர்ந்து, சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகளுக்கான தேவை கணிசமாக உயரவுள்ளதாக கே7 சைபர் செக்யூரிட்டி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. வரும் மே 13, 2027 முதல் தரவுப் பாதுகாப்பு மற்றும் மீறல் அறிவிப்புக் கடமைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதனால் நிறுவனங்கள் தங்களது தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை பாதுகாக்க பெரும் முதலீடுகளை செய்யத் தொடங்கியுள்ளன.

வெறும் கொள்கைகள் போதாது

பாதுகாப்பை நிரூபிக்க வேண்டும் என கே7 அறிக்கை வலியுறுத்தல்

நிறுவனங்கள் வெறும் பாதுகாப்புக் கொள்கைகள் அல்லது டாஷ்போர்டுகளை மட்டுமே நம்பியிருக்காமல், தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் உண்மையிலேயே செயல்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை பராமரிக்க வேண்டும் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வணிக செயலிகள், கிளவுட் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பு விநியோகஸ்தர்களிடம் உள்ள தனிநபர் தரவுகளை பாதுகாக்க திறமையான வல்லுநர்கள் தேவைப்படுவார்கள்.

மேலும் பணிகளை அவுட்சோர்ஸ் செய்தாலும் தரவுப் பொறுப்பாளரின் சட்டப் பொறுப்பு நீங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

Agentic SOC தொழில்நுட்பம் மற்றும் விதி 6-ன் கீழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்புச் செயல்பாட்டு மையங்களில் (SOC) ஏஐ ஏஜென்ட்களைக் கொண்ட 'Agentic SOC' அமைப்புகள் தரவுகளை ஒருங்கிணைக்க உதவினாலும், சட்ட வகைப்பாடு மற்றும் முக்கிய முடிவுகள் மனித குழுக்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என அறிக்கை கூறுகிறது.

விதி 6-ன் கீழ் தரவுகளை என்க்ரிப்ஷன் செய்தல், அணுகல் கட்டுப்பாடு, தொடர் கண்காணிப்பு மற்றும் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தரவு பதிவுகளை (Logs) பாதுகாத்தல் ஆகியவை அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அபராதம்

₹250 கோடி வரை அபராதம் மற்றும் தரவு மீறல் குறித்த 72 மணி நேர அறிவிப்பு கெடு

DPDP சட்டத்தின் கீழ் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறும் நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ₹250 கோடி வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோலத் தனிநபர் தரவு மீறல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் தரவுப் பாதுகாப்பு வாரியத்திற்கும் தாமதமின்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும் இது குறித்த விரிவான அறிக்கையை 72 மணி நேரத்திற்குள் வாரியத்திடம் சமர்ப்பிக்க தவறினால் ₹200 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்பதால் நிறுவனங்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

ADVERTISEMENT