Page Loader
இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்!
2 ஆண்டு தடைக்கு பின் ட்ரம்ப்-இன் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் கணக்குகள் தொடங்கப்பட்டது

இரண்டு ஆண்டு தடைக்குபின் ட்ரம்பின் கணக்குகள் மீண்டும் தொடக்கம்!

எழுதியவர் Siranjeevi
Feb 10, 2023
11:12 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் பேஸ்புக், இஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளகணக்குகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, தடை முடிந்து தற்போது அவரது கணக்குகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா கலவரத்திற்கு பின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்படுகிறது. இருந்தாலும் சில கெடுபிடிகள் விதிக்கப்படும். ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் ஒவ்வொரு விதிமீறலுக்கும் இரண்டாண்டுகள் தடை விதிக்கப்படும் என மெட்டா சர்வதேச விவகாரங்களின் தலைவர் நிக் க்ளெக் தெரிவித்தார். மேலும், ஜனவரி மாத நிலவரப்படி இன்ஸ்டாகிராமில் 23 மில்லியன் பின்தொடர்பவர்களும், பேஸ்புக்கில் 34 மில்லியன் பின்தொடர்பவர்களும் ட்ரம்புக்கு இருந்து உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

ட்ரம்ப்பின் சமூக வலைதள கணக்குகளின் முடக்கம் ரத்து