LOADING...
மொபைல் போனில் டார்க் மோட் வைப்பதால் சார்ஜ் மிச்சமாவது உண்மையா? டிஸ்ப்ளே நிறுவனங்கள் மறைக்கும் அந்த ஷாக்கிங் ரகசியம்
ஸ்மார்ட்போனில் டார்க் மோட் பயன்படுத்தினால் சார்ஜ் சேமிக்கலாமா என்பது குறித்த விளக்கம்

மொபைல் போனில் டார்க் மோட் வைப்பதால் சார்ஜ் மிச்சமாவது உண்மையா? டிஸ்ப்ளே நிறுவனங்கள் மறைக்கும் அந்த ஷாக்கிங் ரகசியம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2026
07:42 pm

செய்தி முன்னோட்டம்

இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் என அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் டார்க் மோட் அம்சம் மிகவும் பிரபலமாக உள்ளது. கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும் என்ற காரணத்திற்காகப் பலரும் இதை எப்போதும் ஆன் செய்து வைத்திருக்கிறார்கள். அதே சமயம், டார்க் மோட் பயன்படுத்தினால் போனின் பேட்டரி சார்ஜ் பயங்கரமாக மிச்சமாகும் என்ற ஒரு கருத்தும் பரவலாக நிலவி வருகிறது. இதில் இருக்கும் அறிவியல் பூர்வமான உண்மை என்ன, நிஜமாகவே சார்ஜ் மிச்சமாகுமா என்பதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.

டிஸ்ப்ளே தொழில்நுட்பம்

டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தின் பின்னால் இருக்கும் ரகசியம்

டார்க் மோட் மூலமாகப் பேட்டரி மிச்சமாகுமா என்பது நீங்கள் வைத்திருக்கும் மொபைல் போனின் டிஸ்ப்ளே எந்தத் தொழில்நுட்பத்தால் ஆனது என்பதைப் பொறுத்தே அமைகிறது. ஸ்மார்ட்போன்களில் பொதுவாக எல்சிடி மற்றும் ஓஎல்இடி (OLED அல்லது AMOLED) என இரண்டு வகையான திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இரண்டு திரைகளும் செயல்படும் விதம் முற்றிலும் மாறுபட்டது என்பதால், டார்க் மோட்டின் தாக்கமும் இவற்றில் வெவ்வேறாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்சிடி திரை

எல்சிடி (LCD) திரை கொண்ட போன்களில் டார்க் மோட் வேலை செய்யுமா?

உங்கள் போனில் எல்சிடி (LCD) அல்லது ஐபிஎஸ் (IPS) டிஸ்ப்ளே இருந்தால், நீங்கள் டார்க் மோட் பயன்படுத்துவதால் ஒரு சதவீதம் சார்ஜ் கூட மிச்சமாகாது. ஏனெனில், எல்சிடி திரைகளின் பின்புறம் ஒரு பொதுவான பேக்லைட் (Backlight) எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். உங்கள் மொபைல் திரையில் கருப்பு நிறத்தைக் காட்டினாலும், வெள்ளை நிறத்தைக் காட்டினாலும் பின்னணியில் உள்ள அந்த விளக்கு முழுத் திறனுடன் வேலை செய்யும். இதனால் எல்சிடி திரைகளில் டார்க் மோட் பேட்டரியை சேமிக்காது.

Advertisement

ஓஎல்டி திரை

ஓஎல்இடி (OLED/AMOLED) திரைகளில் நடக்கும் மாற்றம்

ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் பிரீமியம் ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஓஎல்இடி (OLED/AMOLED) திரைகளில் டார்க் மோட் மிக சிறப்பாக வேலை செய்யும். இந்தத் தொழில்நுட்பத்தில் உள்ள ஒவ்வொரு பிக்சலும் தனித்தனியாகத் தங்களுக்குத் தேவையான ஒளியைத் தாங்களே உமிழ்ந்து கொள்ளும். திரையில் முற்றிலும் கருப்பு நிறம் வரும்போது, அந்தப் பகுதியில் உள்ள பிக்சல்கள் தற்காலிகமாக முழுமையாக அணைக்கப்பட்டுவிடும். விளக்குகள் அணையம்போது மின்சார நுகர்வு தானாகவே நின்றுவிடுகிறது.

Advertisement

எவ்வளவு மிச்சப்படுத்தலாம்?

எந்த அளவிற்குச் சார்ஜ் மிச்சமாகும்? ஆய்வுகள் சொல்வது என்ன?

பல்வேறு நவீன தொழில்நுட்ப ஆய்வுகளின்படி, ஓஎல்இடி திரை கொண்ட போன்களில் டார்க் மோட் பயன்படுத்தும் போது, சாதாரண லைட் மோடை விடச் சுமார் 15% முதல் 30% வரை பேட்டரி சார்ஜ் மிச்சமாவது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீங்கள் போனின் பிரைட்னஸ் அளவை 100 சதவீதம் முழுமையாக வைத்திருக்கும் போது டார்க் மோட் ஆன் செய்தால், பேட்டரி காலியாகும் வேகம் பெருமளவு குறையும். குறைந்த பிரைட்னஸில் இதன் லாபம் சற்றே குறைவாக இருக்கும்.

கண்கள்

பேட்டரி தவிர கண்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நன்மை

டார்க் மோட் என்பது வெறும் பேட்டரியை மட்டும் சேமிக்கும் ஒரு அம்சம் அல்ல. இரவு நேரங்களில் அல்லது வெளிச்சம் குறைவான இடங்களில் மொபைல் பயன்படுத்தும் போது, திரையிலிருந்து வெளிவரும் அதிகப்படியான நீல நிற ஒளி (Blue Light) நம் கண்களைப் பாதிக்காமல் இது தடுக்கிறது. இதனால் கண்கள் சோர்வடைவது, கண் எரிச்சல் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் குறைகின்றன. எனவே, ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்ட போன் பயன்படுத்துபவர்கள் தாராளமாக டார்க் மோடை எப்போதும் ஆன் செய்து வைக்கலாம்.

Advertisement