Page Loader
சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா?
வணிக கேஸ் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது

சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா?

எழுதியவர் Siranjeevi
Apr 01, 2023
11:12 am

செய்தி முன்னோட்டம்

கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டே கேஸ் விலையை தீர்மானித்து வருகிறார்கள். எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை கேஸ் விலை தீர்மானிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் கேஸ் விலை 50 ரூபாய் உயர்ந்து இருந்தது. அதேப்போல் வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் 350 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1.068 மற்றும் ரூ.1.118 ஆகவும் இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதுமே வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் 19 கிலோ எடைக்கொண்ட வணிக சிலிண்டர் 91.50 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 2,028க்கு விற்பனையாகிறது. அதுவே, சென்னையில் 19 கிலோ சிலிண்டர் ஆனது 76 ரூபாய் குறைக்கப்பட்டு 2,192 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை குறைக்கப்பட்டுள்ளது