3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Cognizant நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
உலகளவில் பல டெக் நிறுவனங்கள் பணிநீக்கத்தை தொடர்ந்து வரும் நிலையில், பல ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பணிநீக்கத்தில், அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர், இன்போசிஸ் போன்ற பல நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பணிநீக்கத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிரபல தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனமான Cognizant நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. Cognizant நிறுவனம் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுமட்டுமின்றி செலவுகளை குறைக்க அலுவலகத்தின் 11 மில்லியன் சதுர அடி இடத்தையும் கொடுக்க உள்ளது. தற்போது இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.