Page Loader
கோவையில் வரப்போகுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு
கோயம்புத்தூரில் 2 மில்லியன் சதுர அடி பரப்பளவில் ஒரு ஐடி பூங்கா அமையவுள்ளது

கோவையில் வரப்போகுது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பூங்கா; முதல்வர் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jan 09, 2025
05:34 pm

செய்தி முன்னோட்டம்

கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் *Umagine TN* தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவர் தனது உரையில்,"இந்த மாநாடு தமிழ்நாட்டின் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது. மின் வாகன உற்பத்தி, புதிய தொழில்நுட்ப முன்னெடுப்புகளில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது" என்றும் கூறினார்.

கோவை

கோவையில் AI தொழில்நுட்ப பூங்கா

"இந்த 3வது முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் 2,000க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டி இருக்கிறோம். தமிழ்நாடு, புத்தாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். கோவையில் ஏ.ஐ. தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. மேலும், சைபர் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது," என்றார். சிறிய நகரங்களிலும் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட இருப்பதாகவும், வளர்ச்சி ஒரே இடத்தில் மட்டுமே கவனம் செலுத்தி ஆக கூடாது, அது அனைத்து இடங்களிலும் சமமாக பரவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post