அடுத்த செய்திக் கட்டுரை
    
     
                                                                                அட்சய திருதியை முடிந்தும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம்
                எழுதியவர்
                Siranjeevi
            
            
                            
                                    Apr 24, 2023 
                    
                     12:56 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
தங்கம் விலை அன்றாடம் ஏற்றம் மற்றும் இறக்கத்துடனே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த வகையில், இன்றைய நாள் ஏப்ரல் 25 ஆம் தேதிப்படி தங்கம் விலையானது, 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,615 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 80 ரூபாய் வீதம் உயர்ந்து ரூ.44,920 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளியானது கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!#SunNews | #Goldprice | #Chennai pic.twitter.com/KtgS3ldviU
— Sun News (@sunnewstamil) April 24, 2023