Page Loader
போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!
போட்டித் தேர்வுகளில் ஏமாற்ற பயன்படுத்தப்பட்ட சாட்ஜிபிடி

போட்டித் தேர்வில் ஏமாற்ற சாட்ஜிபிடிப் பயன்படுத்திய தெலுங்கானா கும்பல்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 30, 2023
12:30 pm

செய்தி முன்னோட்டம்

சாட்ஜிபிடி-யை பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், தெலுங்கானாவில் போட்டித் தேர்வுகளில் ஏமாற்ற அதனைப் பயன்படுத்தியிருக்கின்றனர். தெலுங்கானாவில் Assistant Executive Engineer மற்றும் Divisional Accounts Officer ஆகிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஜனவரி 22 மற்றும் பிப்ரவரி 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற ஏழு மாணவர்கள் ப்ளூடூத் சாதனம் மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி ஏமாற்றியது கண்டறியப்பட்டிருக்கிறது. மேற்கூறிய தேர்வுகள் தொடங்கிய பத்து நிமிடங்களில் தேர்வறையில் இருந்த வினாத்தாளை அங்கிருந்த அதிகாரி ஒருவர் புகைப்படம் எடுத்து ரமேஷ் என்வருக்கு அனுப்பியிருக்கிறார். போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்களுக்கு அது குறித்து அறியாதவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை கண்டறிவது எளிதல்ல.

சாட்ஜிபிடி

ஏமாற்று வேலைக்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்: 

எனவே, அந்த வினாத்தாளில் உள்ள வினாக்களுக்கு சாட்ஜிபிடியின் உதவியுடன் விடையைக் கண்டறிந்திருக்கின்றனர். பின்னர் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு தேர்வெழுதிய ஏழு நபர்களுக்கும் ப்ளூடூத் சாதனம் மூலம் விடைகளை பகிர்ந்திருக்கின்றனர். மற்றவர்கள் கண்டறிய முடியாத வகையில் சிறிய ப்ளூடூத் கருவியை தேர்வறையில் இருந்தவர்கள் தங்கள் காதுகளில் பொருத்தியிருக்கிந்திருக்கின்றனர். இந்த ஏமாற்று செயலை தற்போது இது குறித்து விசாரித்து வந்த சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்திருக்கிறது. இப்படி விடைகளைப் பகிர்வதற்காக அந்த ரமேஷ் என்பவருக்கு ஏமாற்று செயலில் ஈடுபட்ட ஏழு பேரும் தலா ரூ.40 லட்சம் கொடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதுதவிர, வெளியே கசிந்த வினாத்தாளை 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ரூ.25 முதல் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவமும் இந்த விசாரணையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.