சாட்ஜிபிடி தரும் டயட் டிப்ஸ் ஆபத்தா? ஈட்டிங் டிஸார்டர் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தற்கால டிஜிட்டல் உலகில் சாப்ட்வேர் கோடு எழுதுவதற்கும், சட்ட ரீதியான குறிப்புகளைத் தேடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்கள், தற்பொழுது மனிதர்களின் மிகத் தனிப்பட்ட ஆரோக்கிய விஷயங்களிலும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைப்பதற்கான பிரத்யேக உணவுத் திட்டங்கள் மற்றும் டயட் டிப்ஸ்களைப் பெறப் பலரும் சாட்ஜிபிடி போன்ற ஏஐ சாட்பாட்களை நாடத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்தத் போக்கு 'ஈட்டிங் டிஸார்டர்' எனப்படும் உணவுக் கோளாறு பாதிப்பு உள்ளவர்களின் மனநல மற்றும் மருத்துவ மீண்டெழுதலைப் பெரிதும் சிக்கலாக்குவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உணவு ஆலோசனை
சாட்பாட்களிடம் உணவு ஆலோசனைகளைக் குவிக்கும் பயனர்கள்
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல பயனர்கள் தங்களது புகைப்படங்களை ஏஐ சாட்பாட்களில் பதிவேற்றி, எப்படி எடையைக் குறைப்பது அல்லது தசைப் பிடிப்புகளை ஏற்படுத்துவது என்று ஆலோசனை கேட்கிறார்கள். இன்னும் சிலர் தங்களது தினசரி உணவு விபரங்களைப் பகிர்ந்து, ஆரோக்கியமான பரிந்துரைகளைக் கோருகின்றனர். இத்தகைய சூழல்களில், இந்த ஏஐ கருவிகள் கார்ப்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாகத் தவிர்க்கச் சொல்வதுடன், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மிகக் குறைந்த கலோரி கொண்ட ஆபத்தான உணவுத் திட்டங்களை சிலருக்குப் பரிந்துரைப்பதாகத் தெரியவந்துள்ளது.
மருத்துவ ஆலோசனை
மருத்துவர்களின் ஆலோசனைகளைச் சாட்ஜிபிடியிடம் சரிபார்க்கும் நோயாளிகள்
ஈட்டிங் ரிக்கவரி சென்டரின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆன் ஓ'மெலியா கூறுகையில், சில நோயாளிகள் தங்களது மருத்துவச் சந்திப்புகளின் போது தங்களது மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகள் சரியானதுதானா என்பதைத் தங்களது மொபைல் மூலம் சாட்ஜிபிடியிடம் உடனுக்குடன் சரிபார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால், மருத்துவர்கள் தங்களின் நோயாளிகளின் குணமடைதலில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், ஏஐ வழங்கிய தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்களைத் திருத்துவதற்கே தங்களது விலைமதிப்பற்ற சிகிச்சை நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.
மனநலம்
மனநலப் பின்னணியைப் புரிந்துகொள்ளத் தவறும் செயற்கை நுண்ணறிவு
உணவுக் கோளாறு உள்ளவர்கள் தங்களின் கவலை மற்றும் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தக் கடுமையான டயட் மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை நம்புகிறார்கள். ஏஐ சாட்பாட்கள் இந்த மனநலப் பின்னணியையும் மருத்துவ வரலாற்றையும் அறியாமல் பொதுவான டயட் டிப்ஸ்களை வழங்கும்போது, அது அவர்களின் தவறான பழக்கங்களை மேலும் ஊக்குவிக்கிறது. ஆரோக்கிய இலக்குகளைக் கொண்ட சாதாரண நபருக்கும், உணவுக் கோளாறு நோயாளிகும் உள்ள சூழலைப் பிரித்தறியும் திறன் ஏஐக்கு இல்லை. 2023-ல் டெஸ்ஸா என்ற சாட்பாட், தவறான எடைக்குறைப்பு ஆலோசனைகளை வழங்கியதால் நீக்கப்பட்டது. இதனால் மனிதர்களின் அசல் பரிவும், அறிவியல் பூர்வமான சிகிச்சையுமே தீர்வாகும்.