ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்களை கசிய விடும் இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்திய குடிமக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உட்பட, தனிப்பட்ட அடையாளம் காணக்கூடிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சில இணையதளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது.
இந்த தகவல் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), இந்த இணையதளங்களில் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்ததை அடுத்து, இந்த இணையதளங்களை முடக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
இதில் சில இணையதளங்கள் மக்களின் தரவை மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்வதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
காவல்துறை
காவல்துறையில் புகார்
ஆதார் சட்டம், 2016இன் கீழ் ஆதார் தொடர்பான விவரங்களை பொதுவில் காட்டுவதை தடை செய்யும் விதியை மீறியதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது.
மேலும், "இந்த இணையதளங்களின் பகுப்பாய்வில் இருந்து சில பாதுகாப்பு குறைபாடுகளை CERT-In வெளிப்படுத்தியுள்ளது.
ஐசிடி உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், குறைபாடுகளை சரிசெய்யவும் அவர்கள் மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட இணையதள உரிமையாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் புகார் அளிக்கவும், இழப்பீடு பெறவும் தீர்ப்பளிக்கும் அதிகாரியை அணுகலாம்.
மாநிலங்களின் தகவல் தொழில்நுட்பச் செயலர்களுக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரிகளாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது." என ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.