BSNL சுதந்திர தின சலுகை: வெறும் ₹1-க்கு 4G சிம் கார்டு! 24 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்
செய்தி முன்னோட்டம்
இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், அரசுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு போட்டியாக 'FREEDOM 2.0' என்ற ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. மதுரை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் லோகநாதன் தெரிவித்துள்ள தகவலின்படி, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும் 4G சேவைக்கு மாற விரும்புபவர்களுக்காகவும் இந்தச் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் சிம் கார்டு விலை, வெறும் ₹1. இதில் உள்ளிட்டவை அடங்கும், 24 நாட்களுக்கு இலவச டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 இலவச SMS வசதி. இந்தச் சலுகை வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
சேட்டிலைட் போன்
இயற்கை பேரிடர்களுக்கான 'BSNL சேட்டிலைட் போன்'
நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்காத கடல் பகுதிகள், அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்பில் இருக்க உதவி செய்யும் வகையில், பிஎஸ்என்எல் முதன்முறையாக சேட்டிலைட் போன் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு அமைப்புகள் மற்றும் தனியார் பயன்பாட்டிற்குக் கட்டண வித்தியாசங்களுடன் இவை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.