Page Loader
கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!
புனேவில் உள்ள கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது!

எழுதியவர் Siranjeevi
Feb 13, 2023
02:25 pm

செய்தி முன்னோட்டம்

கூகுள் மும்பை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் புனே அலுவலகத்தில் வெடிக்குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மும்பை அலுவலகத்திற்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, புனேவின் உள்ள முந்த்வா 11 வது மாடி கட்டிடத்தின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு படையுடன் சென்ற போலீசார் தீவிர தேடுதலை மேற்கொண்டனர். அப்போது அங்கு எதுவும் இல்லை எனவும், இது ஒரு வதந்தி தகவல் என அறிந்ததும், போன் செய்தவரை ட்ராக் செய்து பிடித்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த அவர், தான் மது போதையில் இருந்ததால், அப்படி செய்துவிட்டேன் எனக்கூறியுள்ளார். பின் அவர் கைது செய்யப்பட்டார். அவரை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 505(1)(B) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

கூகுள் நிறுவனத்துக்கு வந்த வெடுகுண்டு மிரட்டல் மீதான நடவடிக்கை