NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம்
    சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய ஸ்டார்லைனர்

    சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்குத் திரும்பிய போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 07, 2024
    06:08 pm

    செய்தி முன்னோட்டம்

    போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ஐஎஸ்எஸ்) விடுவிக்கப்பட்டு பூமிக்குத் திரும்பியது.

    தொழில்நுட்ப சிக்கல்களால் விண்கலம் நீண்ட நாட்கள் தாமதத்திற்குப் பிறகு, அதில் பயணித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் பூமிக்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக, ஜூன் மாதத்தில் ஸ்டார்லைனரில் இருவரும் எட்டு நாட்கள் பயணமாக விண்வெளிக்குச் சென்றனர்.

    இதன் மூலம் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணித்த முதல் இருவர் என்ற பெருமையையும் அவர்கள் பெற்றனர்.

    ஆனால், எதிர்பாராத விதமாக ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், இருவரும் விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    பூமிக்கு திரும்பியது

    ஸ்டார்லைனர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது

    தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டாலும், ரிஸ்க் எடுக்க விரும்பாத நாசா, இருவரையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் விட்டுவிட்டு ஸ்டார்லைனர் விண்கலத்தை மட்டும் தற்போது பத்திரமாக பூமிக்கு மீண்டும் கொண்டு வந்துள்ளது.

    இந்நிலையில், விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 2025 பிப்ரவரி வரை சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருப்பார்கள் எனத் தெரிவித்துள்ள நாசா, அவர்களை ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அப்போது பூமிக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

    2019இல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பிய திட்டம் தோல்வியைத் தழுவிய பிறகு, அந்நிறுவனத்தால் அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை.

    இதற்கிடையே, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற மலிவான செயற்கைக்கோள் ஏவும் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுனிதா வில்லியம்ஸ்
    போயிங்
    விண்வெளி
    நாசா

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    சுனிதா வில்லியம்ஸ்

    ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் ஸ்டார்லைனர்
    சுனிதா வில்லியம்ஸ் எப்போது திரும்புவார்? இன்று NASA தெரிவிக்கக்கூடும்  தொழில்நுட்பம்
    நாசாவின் புதிய புதுப்பிப்பு, சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்கு திரும்பும் நம்பிக்கையை வழங்குகிறது பூமி
    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்; ஸ்பேஸ்எக்ஸ் உடன் நாசா பேச்சுவார்த்தை விண்வெளி

    போயிங்

    போயிங் 787 விமானங்களில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக தகவல் விமானம்
    'உள்ளாடை போல மாற்றப்பட்ட கதவுகள்': பணியிட சவால்களை வெளிப்படுத்திய போயிங் ஊழியர்கள் போக்குவரத்து
    சுனிதா வில்லியம்ஸ தங்கியுள்ள போயிங்கின் ஸ்டார்லைனரில் திடீரென கேட்ட 'விசித்திரமான' சத்தம் ஸ்டார்லைனர்

    விண்வெளி

    மாணவர்களே! உங்களுக்காக இஸ்ரோவின் பாரதிய அந்தரிக்ஷ் ஹேக்கத்தான்; பங்கேற்பது எப்படி? இஸ்ரோ
    விண்வெளியில் உலக சாக்லேட் தினத்தை கொண்டாடிய விண்வெளி வீரர்கள்; வைரலாகும் காணொளி சர்வதேச விண்வெளி நிலையம்
    ISS இல் சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்? நிபுணர் விளக்குகிறார் சர்வதேச விண்வெளி நிலையம்
    நீங்கள் விண்வெளியில், சந்திரனில், செவ்வாய் கிரகத்தில் இறந்தால் என்ன ஆகும்? வாழ்க்கை

    நாசா

    ஐஎஸ்எஸ்க்கு உபநிடதங்கள், பகவத் கீதை, சமோசாக்களை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி
    ISS இல் கண்டறியப்பட்ட 'Spacebug': விண்வெளி வீரர்களுக்கு உடல்நலனுக்கு ஆபத்தா? விண்வெளி
    போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பூமிக்கு திரும்பும் தேதி மேலும் தாமதமாகலாம் விண்வெளி
    NOVA நட்சத்திரம் உருவாவதை விரைவில் காண முடியும் என நாசா தெரிவித்துள்ளது வானியல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025