யூடியூப் வருமானம் மூலம் ஆடி காரை வாங்கிய இளைஞர்! யார் இவர்?
யூடியூப் சேனல் வருமானத்தின் மூலம் ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஜாசோயா என்ற கிராமத்தைப் சேர்ந்தவர் ஹர்ஷ் ராஜ்புட். இவரின் தந்தை பீகார் காவல்துறையில் டிரைவராகப் பணியாற்றியவர். இந்நிலையில், இவர் யூடியூப் சேனலில் பல விதமான நகைச்சுவையான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் கிட்டத்தட்ட 10 நிமிடம் தான் உள்ளன. இதனை கண்ட பார்வையாளர்கள் ரசிக்க 33 லட்சம் பேர் இவரது சேனலுக்கு சப்ஸ்க்ரைபர்கள் கிடைத்துள்ளனர்.
யூடியூப்பால் மாதம் லட்சக்கணக்கில் சம்பாரிக்கும் இளைஞர்
மேலும், இவரது மிகப்பிரபலமான வீடியோக்களை இரண்டு கோடி பேர் பார்த்துள்ளனர். 10 நிமிட வீடியோவிற்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் பிராண்ட் புரோமோஷனும் செய்து தனியாக வருமானம் ஈட்டுகிறார். எனவே, கடந்த ஜூன் 2022 ஆண்டு முதல் அக்டோபர் 2022 வரை அவருக்கு கூகுள் விளம்பரத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 4.5 லட்சம் கிடைத்துள்ளது. யூடியூப் வருமானம் மூலம் ஆடம்பரமாக அவரைக்காட்டிக்கொண்டு, அண்மையில் 50 லட்சம் மதிப்புள்ள ஆடி காரை வாங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.