Page Loader
25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு!
மகிழ்ச்சியுடன் ரத்தன் டாடா பதிவு

25 ஆண்டு காலம் நிறைவடைந்த டாடா இண்டிகா: ரத்தன் டாடாவின் மகிழ்ச்சி பதிவு!

எழுதியவர் Siranjeevi
Jan 16, 2023
04:39 pm

செய்தி முன்னோட்டம்

டாடா இண்டிகா கார் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து ரத்தன் டாடா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்தியாவின் மிக பிரபலமான கார் மாடல்களில் ஒன்றான டாடா இண்டிகா நிறுவனம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தொடங்கியது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கார் ஆன டாடா இண்டிகாவுக்கு மக்கள் மத்தியில் அசத்தலான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், டாடா இண்டிகா நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவானதை அடுத்த் தொழிலதிபர் ரத்தன் டாடா அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Instagram அஞ்சல்

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

மகிழ்ச்சியுடன் ரத்தன் டாடா வெளியிட்ட பதிவு

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "25 ஆண்டுகளுக்கு முன்பு டாடா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் கார் துறையின் பிறப்பு. இந்த இனிய நினைவுகள் மீண்டும் கொண்டுவருகிறது. இது என் இதயத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்றுள்ளது" என பதிவிட்டுள்ளார்.