இந்தியாவில் 10 லட்சம் கார்களை தயாரித்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனம்
சென்ற ஆண்டில் மட்டும், கொரியா நாடு கார் தயாரிப்பு நிறுவனங்களான, ஹூண்டாயும், கியாவும் இணைந்து, 10 லட்சம் யூனிட்கள் கார்களை, இந்தியாவில் தயாரித்து உள்ளது. இது ஒரு உற்பத்தி மைல்கல் என செய்திகள் கூறுகின்றன. இந்தியாவில், மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக, ஒரே வருடத்தில் 10 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை எட்டிய ஒரே வாகன உற்பத்தியாளர்கள் இவைதாம். இங்குள்ள பயணிகள் வாகன விற்பனையில், இவ்விரு பிராண்டுகளும் கூட்டாக, கிட்டத்தட்ட 23% பங்கைக் கொண்டுள்ளன. தனித்தனியாக, ஹூண்டாய் சுமார் 15.45%, கியா 7.27% வாகன சந்தை பெற்றுள்ளது. மேலும், உலகளாவிய உற்பத்தியில், அவற்றின் ஒருங்கிணைந்த பங்கு கிட்டத்தட்ட 15% ஆகும்.
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவன கார் தயாரிப்பு
ஊடகங்களின் தகவலின் படி, ஹூண்டாய் இந்தியா, கிட்டத்தட்ட 7,00,000 யூனிட்களுடன் சென்ற ஆண்டின் உற்பத்தியை நிறைவு செய்தது. அதே நேரத்தில் கியா, 3,40,000 யூனிட்களை உற்பத்தி செய்தது. இது, 2021 இன் உற்பத்தியை விட 20% அதிகமாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டு, கியாவின் வளர்ச்சி 40 % அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், ஹூண்டாய் இந்தியா, தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பம் மற்றும் EVகளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, IONIQ6 க்கான இந்திய விலைகளை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், கியா EV9 ஃபிளாக்ஷிப் எஸ்யூவியை காட்சிப்படுத்தவுள்ளது. அதோடு, Sorento மூன்று-வரிசை SUV மற்றும் மேம்படுத்தப்பட்ட கார்னிவல் MPV ஆகியவையும் காட்சிப்படுத்தவுள்ளது..