NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்?
    என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்

    என்னென்னப புதிய சாதனங்களை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வில் வெளியிடுகிறது ஆப்பிள்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 12, 2023
    10:48 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தாண்டு தங்களது புதிய ஐபோன் சீரிஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை இன்றைய வொண்டர்லஸ்ட் நிகழ்வின மூலம் வெளியிடவிருக்கிறது ஆப்பிள்.

    இந்த நிகழ்வில் தங்களுடைய புதிய வாட்ச் சீரிஸ் 9 ஸ்மார்ட்வாட்ச்களை வெளியிடவிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸை முந்தைய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸில் இருந்து பல்வேறு வகையில் மேம்படுத்தியிருக்கிறது ஆப்பிள்.

    மேம்படுத்தப்பட்ட இதயத் துடிப்பு சென்சாரை புதிய ஸ்மார்ட்வாட்ச்சில் அந்நிறுவனம் கொடுத்திருக்கும் நிலையில், புதிய U2 சிப்பையும் வாட்ச் சீரிஸ் 9ல் ஆப்பிள் பயன்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    ஆனால், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சீரிஸின் டிசைன் மற்றும் வடிவமைப்பு முந்தைய ஸ்மார்ட்வாட்ச்களின் வடிவமைப்பு ஒத்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள்

    புதிய இயங்குதளங்ளையும் அறிமுகப்படுத்தும் ஆப்பிள்

    ஆப்பிள் வொண்டர்லஸ்ட் நிகழ்வின் முக்கிய அம்சம் ஆப்பிளின் ஐபோன் 15 சீரிஸ் தான். முந்தைய ஐபோன்களைப் போல இல்லாமல் பெரிய மாற்றம் ஒன்று இந்த ஐபோந் 15 சீரிஸில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    புதிய 15 சீரிஸ் ஐபோன்களில், ஆப்பிள் வழக்கமாகப் பயன்படுத்தும் லைட்னிங் சார்ஜிங் போர்ட் இல்லாமல், டைப்-சி சார்ஜிங் போர்ட்டை பயன்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    15 சீரிஸின் கீழ் வெளியாகவிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களிலும் டைப்-சி போர்ட்டே கொடுக்கப்பட்டிருந்தாலும், அதிகவேக டேட்டா பரிவர்த்தனை வசதியுடன் கூடிய போர்ட்டை, 15 சீரிஸின் ப்ரீமியம் வெர்ஷன்களான ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸில் மட்டுமே அந்நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவைதவிர, ஐஓஎஸ் 17 மற்றும் வாட்ச்ஓஎஸ் 10 ஆகிய இயங்குதளங்களையும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தவிருக்கிறது ஆப்பிள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    ஆப்பிள் தயாரிப்புகள்
    ஐபோன்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஆப்பிள்

    சூதாட்ட செயலிகளை நீக்க முடியாது.. மத்திய அரசின் உத்தரவை ஏற்க மறுத்த ஆப்பிள்! கூகுள்
    ஆப்பிளின் WWDC 2023 நிகழ்வு.. எப்போது? என்ன எதிர்பார்க்கலாம்? ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் WWDC 2023: இந்த நிகழ்வில் வெளியான மின்சாதன அறிவிப்புகள் என்னென்ன? ஆப்பிள் தயாரிப்புகள்
    ஆப்பிள் WWDC 2023: ஆப்பிள் சாதனங்களின் இயங்குதளங்களுக்கான அப்டேட்கள்? ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    ஆப்பிள் ஐபோன் iOS 16 ஒளிந்திருக்கும் அம்சங்கள் - என்னென்ன? ஐபோன்
    பணிநீக்கத்தை தவிர்க்க ஆப்பிள் நிறுவனம் இவற்றை எல்லாம் செய்கிறது ஆப்பிள்
    திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை! ஆப்பிள்
    தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்! ஆப்பிள் நிறுவனம்

    ஐபோன்

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை! கதிகலங்கிய சாம்சங் ஸ்மார்ட்போன்
    ஐபோன் யூஸர்களுக்கு ஹாப்பி நியூஸ்! வந்தாச்சு iOS 16.3 அப்டேட் ஸ்மார்ட்போன்
    ஐபோன் 15 இன் முக்கியமான 4 அம்சங்கள் இதுதானா? இன்ப அதிர்ச்சி! ஸ்மார்ட்போன்
    iOS, Android பயனாளர்களுக்கு டெலிகிராமின் புதிய அப்டேட்! தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025