சத்தமே இல்லாமல் பணிநீக்கம் செய்த ஆப்பிள்! ஊழியர்கள் கதறல்
செய்தி முன்னோட்டம்
இதுவரை பணீநிக்க நடவடிக்கையை எடுக்காமல் இருந்த ஆப்பிள் நிறுவனம் சத்தமே இல்லாமல் பணீநீக்கம் செய்துள்ளது.
உலகில் பல முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து வருந்தது, அதில் முக்கிய நிறுவனங்களான கூகுள் , அமேசான், ட்விட்டர், மெட்டா போன்ற பெருநிறுவனங்கள் கொத்து கொத்தாய் ஊழியர்களை பணிநீக்கம் செய்தன.
ஆனால், ஆப்பிள் நிறுவனம் மட்டும் தனது CEO டிம் குக் சம்பளத்தை குறைத்ததோடு அமைதியாக இருந்தது.
அதே போல், ஊழியர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் வராது என்று உறுதியும் கொடுத்திருந்தது.
ஆப்பிள் நிறுவனம்
திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஆப்பிள் நிறுவனம் - காரணம் என்ன?
ஆனால், இத்தனை நாட்களாக ஊழியர்களை பாதுகாப்போம் என்று கூறிக்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனம் திடீரென்று நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதை விட முக்கியமாக, ஆப்பிள் தனது பணிநீக்கத்தை ஒப்பந்த ஊழியர்கள் உடன் நிறுத்திக்கொள்ளுமா அல்லது தனது நிரந்தர ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுமே மூன்றாம் கட்ட நிறுவனங்கள் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டவர்கள்.
மேலும், எத்தனை ஊழியர்கள் பணிநீக்கப்பட்டுள்ளார்கள் என்று இன்னும் சரியான எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. செலவினங்களை குறைக்க இப்படியான ஒரு முடிவை எடுத்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.