பணிநீக்கம் செய்யாத ஒரே நிறுவனமாக ஆப்பிள்: இதுதான் காரணமா?
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாக பல நிறுவனங்கள் பணி நீக்க செயல்பாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த பணி நீக்கத்தால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டு தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்து, அமேசான் நிறுவனம் 17 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. ஆல்பாபெட் சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. தொடர்ந்து கோல்ட்மேன் சாச்ஸ் 3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஸ்விக்கி நிறுவனம் கடந்த நாளில் 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.
பணி நீக்கம் செய்யாத ஒரே நிறுவனம் ஆப்பிள் - காரணம் என்ன?
இப்படி பல நிறுவனங்கள் பணி நீக்கத்தை தொடர்ந்தாலும், இது வரை ஆப்பிள் நிறுவனம் மட்டுமே பணிநீக்கம் செய்யாமல் இருந்து வருகிறது. கொரோனா தொற்றின் போது ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி மெதுவாகத்தான் இருந்தது குறிப்பாக, ஆப்பிளின் பணியமர்த்தல் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரே மாதிரியான போக்கை பின்பற்றுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தில் 164,000 பணியாளர்கள் உள்ளனர். ஆனால், இவை கடந்த 2021 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்து மட்டுமே 6.5% மட்டுமே உயர்ந்தது. இவை 10 ஆயிரம் ஊழியர்களின் உண்மையான வளர்ச்சியாகும்.