ஐபோன் யூஸர்களுக்கு ஹாப்பி நியூஸ்! வந்தாச்சு iOS 16.3 அப்டேட்
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் பயனாளர்களை குஷிப்படுத்தும் விதமாக iOS 16.3 அப்டேட்டை வெளியிட்டுள்ளது. புதிதாக ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை வாங்கிய ஆப்பிள் ரசிகர்களுக்கு அப்டேட்டிற்காக நீண்ட காலம் காத்திருக்கின்றனர். அதன்பலனாக புதிய iOS 16 வால்பேப்பருக்கு iOS 16.3 அப்டேட் தேவை என்பதை ஆப்பிள் உறுதிப்படுத்தி தற்போது வெளியிட்டு இருக்கிறது. இவை, 16.3 அப்டேட் கட்டாயம் ப்ரோ மாடல்களில் உள்ள சிக்கலை தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் ஐடியை பாதுகாக்கவும், iCloud கணக்குகளுக்கான நிறுவனத்தின் மேம்பட்ட தரவுகளையும் பாதுகாக்கிறது. குறிப்பாக சில ஐபோன் 14Pro மற்றும் iPhone 14 Pro Max சாதனங்கள் விழித்தவுடன் காணப்படும் ஹரிசாண்டல் கோடுகளை இது சரி செய்யும்.
ஆப்பிள் ஐபோனின் iOS 16.3 அப்டேட் - குறைபாட்டை சரிசெய்யும் முறை
இதுமட்டுமின்றி இந்த புதிய அப்டேட் ஆப்பிள் ஐடிகளைப் (Apple ID) பாதுகாக்க பிஸிக்கல் ப்ரொடெக்டிக் கீஸ்-களைப் பயன்படுத்துவதைச் செயல்படுத்தும். இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கான டு-பாக்டர் ஆதென்டிகேஷன் (Two-Factor Authentication) அங்கீகாரத்தை வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய அப்டேட் ஆனது, ஃப்ரீஃபார்ம், குறைபாட்டைச் சரிசெய்யும். அடுத்து ஹோம் லாக் ஸ்கிரீன் விட்ஜெட் ஹோம் ஆப்ஸின் நிலையைத் துல்லியமாகக் காட்டாத சிக்கலைச் சரி செய்ய உதவுகிறது. எப்படி பெறுவது? iOS 16.3 அப்டேட் தற்போது படிப்படியாக வெளிவருகிறது. எனவே, இது உங்கள் சாதனத்தில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகலாம். இதற்கு, Settings > General > Software Update என்பதற்குச் சென்று புதுப்பித்தலைச் சரிபார்க்க பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.