Loading...
டேட்டா இல்லாத புதிய வாய்ஸ் பிளான்கள் அறிமுகம்; ஏர்டெல் வெளியிட்ட 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்
டேட்டா இல்லாத புதிய வாய்ஸ் பிளான்கள் அறிமுகம் செய்தது ஏர்டெல்

டேட்டா இல்லாத புதிய வாய்ஸ் பிளான்கள் அறிமுகம்; ஏர்டெல் வெளியிட்ட 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 18, 2026
04:18 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) புதிய வழிகாட்டுதல்களின்படி, ஏர்டெல் நிறுவனம் டேட்டா சலுகைகள் இல்லாத 3 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.185, ரூ.203 மற்றும் ரூ.206 ஆகிய விலைகளில் இந்த புதிய வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தாமல், முதன்மையாகக் குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை மட்டுமே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த சலுகைகள் ஏர்டெல் இணையதளம் மற்றும் செயலியில் நேரலைக்கு வந்துள்ளன.

புதிய விதிகள்

டிராய் அமைப்பின் புதிய விதிகள் மற்றும் கெடு

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா இல்லாத பிரத்யேக அழைப்புத் திட்டங்களை வழங்க வேண்டும் என டிராய் கடந்த செப்டம்பர் 2026-இல் உத்தரவிட்டது.

இதற்காக அக்டோபர் 21-ஆம் தேதியை இறுதி கெடுவாக நிர்ணயித்திருந்தது. தேவையில்லாமல் மொபைல் டேட்டாவிற்குக் கூடுதல் கட்டணம் செலுத்தும் ஃபீச்சர் போன் பயனர்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

டிராய் கெடு முடிவதற்கு முன்பாகவே இத்திட்டங்களை அறிமுகப்படுத்திய முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் உருவெடுத்துள்ளது.

இந்த தீர்மானம் ஏழை எளிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

வேலிடிட்டி

மூன்று புதிய திட்டங்களின் சலுகைகள் மற்றும் வேலிடிட்டி

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள மூன்று திட்டங்களிலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளுடன் 300 இலவச குறுஞ்செய்திகள் வழங்கப்படுகின்றன.

இதில் ரூ.185 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியையும், ரூ.203 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியையும் கொண்டுள்ளன.

மேலும் ரூ.206 திட்டம் நிலையான நாட்களுக்குப் பதிலாக ஒரு முழு கேலண்டர் மாதத்திற்கான வேலிடிட்டியை வழங்குகிறது.

அத்துடன் மூன்று திட்டங்களிலும் கூடுதல் கட்டணமின்றி இலவச ஹெலோடியூன்ஸ் சேவையையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

யாருக்கு பலன்?

யாரெல்லாம் இத்திட்டங்களால் பயன்பெற முடியும்?

ஸ்மார்ட்போன்களில் வைஃபை இணைப்பை மட்டுமே பயன்படுத்துவோர் மற்றும் இரண்டாவது சிம் கார்டை வெறும் அழைப்புகளுக்காக மட்டும் வைத்திருப்பவர்களுக்கு இத்திட்டங்கள் சிறந்த மாற்றாகும்.

தேவையில்லாத டேட்டாவிற்குக் கட்டணம் செலுத்துவதைத் தடுத்து, தங்களின் தேவைக்கு ஏற்ற ரீசார்ஜ் பேக்குகளைத் தேர்வு செய்ய இத்திட்டம் வழிவகுக்கிறது.

டிராய் அமைப்பின் புதிய விதிகளின்படி ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய பிற நிறுவனங்களும் விரைவில் இத்தகைய டேட்டா இல்லாத திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT