கேரளாவில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்! அறிமுக சலுகை என்ன?
5ஜி சேவையை ஜியோ நிறுவனம் இதுவரையில் 225 நகரங்களில் அளித்துள்ளன. ஜியோ வெல்கம் சலுகையாக 1 Gbps வேகத்தில் அன்லிமிடெட் டேடாக்களை கொடுத்துள்ளன. இவர்களை தொடர்ந்து, ஏர்டெட் 5ஜி சேவையை இதுவரை வெளியிடாத நிலையில், தற்போது கேரளாவில் கோழிக்கோடு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஏர்டெல் தற்போதைய 4ஜி நெட்வொர்க்கை விட விட 20-30 மடங்கு வேகமான வேகத்தை கூடுதல் கட்டணமின்றி அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால், அதன் 5ஜி டேட்டா திட்டங்களை பற்றி இன்னும் வெளியிடவில்லை. கேரளாவில் ஏர்டெல் 5ஜி சேவையானது கோழிக்கோடு, நடக்கவே, பாளையம், கல்லாய், வெஸ்ட் ஹில், குட்டிச்சிரா, எரஞ்சிப்பாலம், மீன்சந்தா, தொண்டையாடு, மலபரமாபா, ஆகிய இடங்களில் 5ஜி நெட்வொர்க் கிடைக்கிறது.
ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்; கேரளாவில் கிடைக்கூடிய இடங்களின் விபரங்கள்;
திருவனந்தபுரத்தில் , வழுதக்காடு , தம்பனூர், கிழக்கு கோட்டை, பாளையம், பட்டம், கஜகூட்டம், வட்டியூர்காவு, பாப்பனம்கோடு, கோவளம், விழிஞ்சம் மற்றும் வலியவிளை ஆகிய இடங்களில் ஏர்டெல்லின் 5ஜி சேவைகள் நேரலையில் உள்ளன. தொடர்ந்து, திருச்சூரில் , ராமவர்மபுரம், திருச்சூர் சுற்று, கிழக்குக் கோட்டை, கூர்க்கஞ்சேரி, ஒளரிகரை, ஒல்லூர், மண்ணுத்தி மற்றும் நடதாரா ஆகிய பகுதிகளை அடைந்துள்ளது. கடந்த மாதம், ஏர்டெல் தனது 5ஜி சேவையை கொச்சியிலும் அறிமுகப்படுத்தியது . மேலும், கொச்சியைத் தவிர கோழிக்கோடு, திருவனந்தபுரம் மற்றும் திருச்சூரில் ஏர்டெல் 5ஜி பிளஸ் அறிமுகம் செய்யப்படுவதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என கேரளாவின் பார்தி ஏர்டெல்லின் சிஓஓ அமித் குப்தா தெரிவித்துள்ளார்.