Loading...
மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை
ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு

மனிதகுலத்திற்கு ஆபத்தா? ஏஐ வேகத்தைக் குறைக்க எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் ஆதரவு; டேரியோ அமோடேய் எச்சரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2026
07:38 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை உருவாக்கும் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேரியோ அமோடேய் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தொழில்நுட்பத்தின் திறன்கள் ஆபத்தான வேகத்தில் வளர்ந்து வருவதால் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தக் கூடுதல் காலம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த அதிரடி நிலைப்பாட்டிற்கு ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனத்தின் எலான் மஸ்க் ஆகியோரும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு

பாதுகாப்பிற்கான மூன்று அம்சத் திட்டம்

செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பாதுகாப்பை ஆய்வு செய்ய சுதந்திரமான வெளிப்புற மதிப்பீட்டாளர்களை நியமிக்க வேண்டும் என்று டேரியோ அமோடேய் முன்மொழிந்துள்ளார்.

மேலும் ஏஐ நிறுவனங்கள் தங்களுக்குள் ஒருங்கிணைந்து உலகளாவிய பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது க்ளாட் ஏஐ மாடல்கள் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் ஆயுதத் தயாரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 6 முதல் 12 மாதங்களில் ஏஐ ஏஜென்ட்கள் இணையத்தையே முடக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆதரவு

சாம் ஆல்ட்மேன் மற்றும் எலான் மஸ்க் ஆதரவு

டேரியோ அமோடேயின் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டுள்ள ஓபன்ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், தங்களின் நிறுவனத்திலும் சுயாதீன மதிப்பீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதேபோல எலான் மஸ்க்கும் ஏஐ அமைப்புகளுக்குக் கூடுதல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தேவை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பில்லியன் டாலர் முதலீடுகள் மற்றும் ஐபிஓ வெளியீடு போன்ற நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மனிதகுலத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முன்னணி நிறுவனங்கள் இந்த முடிவிற்கு முன்வந்துள்ளன.

ADVERTISEMENT

சீனா

சீனாவின் போட்டி மற்றும் சர்வதேசக் கட்டுப்பாடுகள்

அதேவேளையில் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியை நிறுத்துமாறு தான் கூறவில்லை என்றும், பாதுகாப்பு நடைமுறைகளுடன் இணைந்தே தொழில்நுட்பம் வளர வேண்டும் என்றும் அமோடேய் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கா உள்ளிட்ட ஜனநாயக நாடுகள் தங்களின் ஏஐ வேகத்தைக் குறைக்கும் போது சீனா முன்னிலை பெற்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் மேம்பட்ட ஏஐ சிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சீனா கைகளுக்கு செல்வதைத் தடுக்கக் கடுமையான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT