துபாயில் ரமலான் உணவு பரிமாறும் பிரபலங்கள் - ட்ரெண்டாகும் AI புகைப்படங்கள்
செயற்கை நுண்ணறிவு ஆனது உலகளவில் ட்ரெண்டாகியுள்ளது. பல நிறுவனங்கள் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் வேலைகளை எளிதாக்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி AI டூல்களை பயன்படுத்தி பலர் தங்களுக்கு தேவையான புகைப்படங்களை மாற்றி அமைத்து வருகின்றனர். அண்மையில், உலக கோடீஸ்வரர்கள் ஏழையாக இருந்தால் எப்படி இருக்கும் என எடிட் செய்து ட்ரெண்டாக்கி வந்தார்கள். அந்த வகையில், துபாயில் பிரபலங்கள் ரமலான் இப்தார் உணவு தயாரித்து பரிமாறும் AI-உருவாக்கிய படங்கள் இணையத்தில் ஒரு கலைஞர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, போப் பிரான்சிஸ், புரூஸ் வில்லிஸ், வில் ஸ்மித், ஜாஹ்னி டெப், டாம் குரூஸ் மற்றும் பலர் போன்ற செல்வாக்குமிக்க பிரபலங்கள் உள்ளனர்.