ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்?
செய்தி முன்னோட்டம்
இன்று உலக சுற்றுச்சூழல் தினம், நமது பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய நாளில் சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றான் எலெக்ட்ரானிக் குப்பைகள் குறைப்பதைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வளர்ந்து வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாகச் சுருங்கி விட்டது. ஒரு ஸ்மார்ட்போனை யாராக இருந்தாலும், அதிக பட்சம் ஐந்து ஆண்டுகள் உபயோகிப்பதே அரிது.
ஒவ்வொரு தனிநபருக்கு ஒரு மொபைல் என்ற நிலை ஆன பிறகு, எலெக்ட்ரானிக் குப்பையின் அளவும் தொடர்ந்து அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.
சுற்றுச்சூழல்
இந்தப் பிரச்சினையை தடுக்க என்ன செய்யலாம்?
இரண்டு அல்லது மூன்று ஆண்டுப் பயன்பாட்டிற்குப் பிறகு புதிய ஸ்மார்ட்போனை வாங்கும் போது உபயோகமில்லாத பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை வாங்குவது சிறந்த முடிவு.
இதனால், நம்முடைய புதிய ஸ்மார்ட்போனின் விலையை நம்மால் குறைக்க முடியும். அதாவது பழைய ஸ்மார்ட்போனைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை வாங்குதவன மூலம் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஒரு தொகை நமக்குக் கிடைக்கு.
இப்படி பழைய ஸ்மார்ட்போனைக் கொடுத்து வாங்குவதன் மூலம் நம்மால் உருவாகும் எலெக்ட்ரானிக் குப்பை கொஞ்சம் குறையும்.
பழைய ஸ்மார்ட்போனை குப்பையில் வீசி எறிவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. ஆனால், அதனை இப்படி மாற்றுவதன் மூலம், சரியான முறையில் மறுசுழற்சி செய்வதற்கு அதனை அனுப்புகிறோம்.