
சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியது ஆதித்யா-L1
செய்தி முன்னோட்டம்
கடந்த செப்டம்பர் 2ம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-L1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ.
கடந்த 17 நாட்களாக பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து வெளியேறுவதற்கான உந்து விசையைப் பெற, பூமியை வலம் வந்து கொண்டிருக்கிறது ஆத்தியா-L1.
இந்த 17 நாட்களில் பூமியை சுற்றி வரும் ஆதித்யா-L1ன் சுற்றுவட்டப்பாதை உயரத்தைக் கொஞ்சம் கொஞ்சமா உயர்த்தி வந்தது இஸ்ரோ.
கடைசியாக கடந்த செப்டம்பர் 15ம் தேதியன்று, ஆதித்யா-L1ன் கடைசி சுற்றுவட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டது இஸ்ரோ.
மேலும், ஆதித்யா-L1 குறித்த மேற்கூறிய தகவல்களை தொடர்ந்து எக்ஸ் தளத்திலும் பதிவிட்டு வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.
ஆதித்யா-L1
சூரியனை நோக்கிய பயணத்தைத் தொடங்கிய ஆதித்யா-L1:
இது வரை பூமியை வலம் வந்து கொண்டிருந்த ஆதித்யா-L1ஐ அதன் இலக்கான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை நோக்கிய பாதையில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது இஸ்ரோ. இந்த நடவடிக்கையானது இன்று அதிகாலை 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருக்கிறது இஸ்ரோ.
தற்போது இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, லெக்ராஞ்சு புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறது ஆதித்யா-L1.
110 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை ஆதித்யா-L1 அடையும் எனத் தெரிவித்திருக்கிறது இஸ்ரோ. அதன் பின்பு, அந்தப் புள்ளியில் ஹேலோ சுற்றுவட்டப்பாதையில் ஆதித்யா-L1 நிலைநிறுத்தப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.
ஆதித்யா-L1 பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே, அதிலிருந்து STEPS அறிவியல் உபகரணத்தைப் பயன்டுத்தி இஸ்ரோ ஆய்வுகளைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரோவின் எக்ஸ் பதிவு:
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 18, 2023
Off to Sun-Earth L1 point!
The Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) maneuvre is performed successfully.
The spacecraft is now on a trajectory that will take it to the Sun-Earth L1 point. It will be injected into an orbit around L1 through a maneuver… pic.twitter.com/H7GoY0R44I