
அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன?
செய்தி முன்னோட்டம்
ஹிண்டன்பர்க் அறிக்கையால் பெரும் சரிவை சந்தித்து வரும் அதானி குழுமம் தற்போது, அதானி வில்மர் நிறுவனக் கடைகள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து, இமாச்சலப்பிரதேச மாநில கலால் மற்றும் வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர்.
அதானி வில்மர் குழுமம் கடந்த 5 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அது தொடர்பாக அதானி வில்மர் குழுமத்தின் அலுவலகங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை செய்து உள்ளனர்.
அப்போது, சேமிப்பு கிட்டங்கியில் இருந்த பொருட்கள் இருப்பு, ஆவணங்களை ஆய்வு செய்தனர்., சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த பணம் குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அதானி குழுமம்
அதானி வில்மர் குழும வரி ஏய்ப்பு ரெய்டில் சிக்கியது என்ன?
அதானி குழுமத்துக்கு சொந்தமான ஏசிசி, அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இமாசலப் பிரதேசத்தில் இயங்கி வந்த இரண்டு சிமெண்ட் ஆலைகளை டிசம்பர் 14ஆம் தேதி முதல் மூடிவிட்டன.
இதுகுறித்து, அதானி வில்மர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஜிஎஸ்டி முறைகேடுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், அதானி வில்மர் வரி ஏதும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் அதானி குழுமத்துக்கு சொந்தமாக 7 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3வது காலாண்டில் இந்த நிறுவனங்கள் ரூ.246 கோடி லாபம் ஈட்டியன.