Page Loader
சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமம் -  20 சதவீதம் உயர்வு!
அதானி குழுமம் மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது

சரிவிலிருந்து மீண்ட அதானி குழுமம் - 20 சதவீதம் உயர்வு!

எழுதியவர் Siranjeevi
Feb 07, 2023
05:25 pm

செய்தி முன்னோட்டம்

அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் ஒற்றை அறிவிப்பால் பெரும் சரிவை கண்டு வருகிறது. உலக பணக்கார பட்டியலில் 22வது இடத்திற்கு கெளதம் அதானி தள்ளப்பட்டார். ஒட்டுமொத்த குழுமத்தின் பங்குகள் விலை பங்குச் சந்தையில் தொடர்ந்து எட்டு நாள் வணிகத்தில் ரூ.10 லட்சம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகளின் விலை தொடர்ந்து சரிந்து வரும் வேளையில் அதானி குழும பங்குகளை அடைமானம் வைத்து வாங்கிய 1114 மில்லியன் டாலர் கடனை முன்கூட்டியே செலுத்தியது. இதன் எதிரொலியாக, இன்று அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்று 25 சதவீத அப்பர்சர்கியூட் உயர்வை எட்டின. இதன் மூலம் கிட்டதட்ட 100 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அதானி குழுமத்தின் பங்குகள் உயர்வு - வைரலாகும் #AdaniBackOnTrack

ட்விட்டர் அஞ்சல்

அதானி பங்குகள் மதிப்பு அதிகரிப்பு