19, 000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஐடி நிறுவனமான Accenture!
பல டெக் நிறுவனங்கள் தொழில்நுட்பம் மந்தநிலை காரணமாக பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அக்சென்சர் நிறுவனமும் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி இந்நிறுவனம் வருடாந்திர வருவாய் மற்றும் லாப கணிப்புகளை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐடி சேவை துறையில் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் Accenture நிறுவனம் தனது வருவாய் கணிப்பை வெளியிட்டு இருந்தது. இந்நிறுவனம் ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 10% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. இதற்குமுன் இதன் அளவீட்டை 8% முதல் 11% ஆக நிர்ணயம் செய்திருந்தது.