மீண்டும் 9000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் அமேசான் - CEO-வின் அதிரடி அறிவிப்பு!
உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம், கடந்த ஜனவரி மாதத்தில் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இதனைத்தொடர்ந்து, தற்போது மேலும், 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக கூறியுள்ளது. இந்த பணிநீக்கத்தில், அமேசான் வெப் சர்வீசஸ், ட்விச் மற்றும் விளம்பர பிரிவை சேர்ந்த ஊழியர்கள் இருக்ககூடும் என தெரிவிக்கிறது. தொடர்ந்து, இ-காமர்ஸ் மொத்த பணிநீக்கமாக இதுவரை கடந்த 3 மாதத்தில் மட்டும் 27,000 ஐ எட்டியுள்ளது. இது வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம் ஆகும். இதுகுறித்து அமேசான் தலைமை நிறுவனர் ஆண்டி ஜாஸ்ஸி கடிதத்தில் தெரிவிக்கையில், இந்த முடிவானது நீண்ட காலத்திற்கு நிறுவனத்திற்கு சிறந்தது என தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தில் பணிநீக்க நடவடிக்கை ஏன்? விளக்கிய சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி
மேலும், பொருளாதாரம் மற்றும் எதிர்காலம் காரணமாக நிறுவனம் அதன் செலவுகள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளது என விளக்குகிறார். தொடர்ந்து, மெமோவில், நிறுவனத்தின் வருடாந்திர திட்டமிடல் செயல்முறையின் இரண்டாம் கட்டம் இந்த மாதம் நிறைவடைந்ததாகவும், அதுவே கூடுதல் பணநீக்க நடவடிக்கைக்கு வழிவகுத்தகாவும் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் வெளியிட அறிவிப்பின்படி இந்த பணி நீக்கம் குறித்து ஏன் அறிவிக்கவில்லை என சிலர் கேட்கலாம். அதற்கு, சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அனைத்து பணிகளும் சிறப்பாக செயல்படவில்லை என தெரிந்தது. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம் ஊழியர்கள் உரிய நேரத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவிப்போம் எனவும் ஆண்டி ஜெஸ்ஸி தெரிவித்துள்ளார்.