Page Loader
1000 ஊழியர்கள் பணிநீக்கம்: கண்ணீர் சிந்திய அமேசான் ஊழியர்கள்!
அமேசான் ஊழியர்கள் 1000 பேர் பணி நீக்கம்

1000 ஊழியர்கள் பணிநீக்கம்: கண்ணீர் சிந்திய அமேசான் ஊழியர்கள்!

எழுதியவர் Siranjeevi
Jan 16, 2023
04:22 pm

செய்தி முன்னோட்டம்

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1000 பேரை பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தொழில் நுட்ப பிரிவு, மனித வள பிரிவு என பல துறைகளிலும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் இருந்தே பல நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பணி நீக்க செயல்பாட்டில் அமேசான் நிறுவனமும் இணைந்திருந்தது. கொரோனாவின் காலத்தின் போது ஆன்லைன் ஆர்டர்கள் அதிகளவில் குவிந்ததால், அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்த்தது. ஆனால், தற்போது உலகளாவில் பணவீக்கம் சரிவினை கண்டதால், அமேசான் நிறுவன பணி நீக்கத்தில் ஈடுப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அமேசான் ஊழியர் கண்ணீருடன் பதிவு

அமேசான்

கண்ணீருடன் அமேசான் ஊழியர்கள் வெளியேற்றம்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உதவும் விதமாக, மருத்துவ காப்பீடு மற்றும் வேறு வேலை தேடுவதற்கான ஆதரவினை வழங்க இருப்பதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பணி நீக்க நவடிக்கையினால், ஊழியர்களுக்கு 5 மாத சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாம். இப்படி, ஒரு அறிவிப்பால் பல ஊழியர்கள் கண்ணீருடன் வெளியேறி வருவதாகவும், அதில் ஒரு ஊழியரின் பதிவு இணையத்திலும் வைரலாகி வருகிறது. அவர், ட்விட்டரில் கூறியதில், "தனது குழுவில் 75 சதவீதம் பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு பணி செய்யும் மனநிலை இல்லை எனவும் என குறிப்பிட்டிருந்தார். மேலும், பணி நீக்கத்தால் பலரும் கண்ணீர்விட்டு அழுததாகவும்" குறிப்பிட்டார். பணி நீக்க நடவடிக்கையால் சுமார் 18,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.