
ஆதார் மித்ரா - ஆதார் சந்தேகளுக்கு பதிலளிக்கும் AI சாட்பாட் அறிமுகம்!
செய்தி முன்னோட்டம்
UIDAI அல்லது இந்திய தனித்துவ அடையாள ஆணையம், 'ஆதார் மித்ரா' எனப்படும் AI அடிப்படையிலான புதிய சாட்போட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய சாட்பாட், ஆனது, ஆதார் அட்டையின் நிலை மற்றும் பதிவு மைய இருப்பிடம் பற்றிய தகவல்கள் போன்ற அனைத்து தகவல்களையும் பயனர்கள் கண்காணிக்க உதவும்.
இது மட்டுமின்றி, ஆதார் மித்ரா பயனர்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யவும், அவர்களின் நிலையை கண்காணிக்கவும் அனுமதிக்கிறது.
மக்களின் குறை தீர்க்கும் பொறிமுறைகளில் ஒன்றாக இது இயங்கும் என தெரிவித்துள்ளனர்.
இது குறித்த அறிவிப்பை ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்திய மக்களின் பல்வேறு தரவுகளை யுஐடிஏஐ தளத்தில் சேகரித்து வைத்துள்ளது.
ஆதார் மித்ரா
ஆதார் மித்ரா AI சாட்பாட் அறிமுகம் - செயல்படுத்துவது எப்படி?
இப்போதைக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இதனை பயனர்கள் பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
ஆர்வமுள்ள பயனர்கள் www.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய சாட்போட் அணுகலைப் பெறலாம்.
யுஐடிஏஐ தளத்தின் வலது பக்கத்தில் கீழ்புறம் இந்த பாட் இடம் பெற்றுள்ளது.
அதை க்ளிக் செய்தால் பாட் ஓபன் ஆகிறது. அதில் பிவிசி ஸ்டேட்டஸ், ஆதார் நிலை, தவறவிட்ட ஆதார், இ-ஆதார் மற்றும் ஆதார் பதிவு மையம் குறித்த விவரங்கள், புகார் தெரிவிக்க போன்ற சேவைகளுக்கு இது பயன்படும் எனத் தெரிகிறது.