
ஆதார்-பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 கெடு! இணைப்பது எப்படி?
செய்தி முன்னோட்டம்
வருகிற மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் எந்தவிதமான பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியாது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், 10இலக்க பான் எண் செயலிழந்துவிடும் எனக்கூறியுள்ளனர்.
மேலும், ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க தற்போது விரும்பவர்கள் அபராதமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
ஆதாருடன்-பான்கார்டை இணைப்பது எப்படி?
UIDPAN என டைப் செய்ய வேண்டும்.
UIDPAN இடைவெளி- 12 இலக்க ஆதார் எண்(இடைவெளி) 10இலக்க பான் எண்ணை டைப் செய்ய வேண்டும்.
ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
ஆதார் - பான் இணைப்பு
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கும் வழிமுறைகள்
குறுஞ்செய்தி அனுப்பியபின், ஆதாருடன் பான் எண் இணைக்கப்பட்டது குறித்த உறுதியான செய்தி கிடைக்கும்.
ஆன்லைன் மூலம் இணைக்கும் வழி
eportal.incometax.gov.in or incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்.
உங்களைப் பற்றிய விவரத்தை பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது ஆதார் எண் யூசர் ஐடியாகும்.
திரையில் வரும் லிங்கை கிளிக் செய்தால், HOME PAGE-க்கு செல்லும்.,
ஆதாருடன் பான் இணைப்பது என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
பான் எண் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து, ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
தொடர்ந்து, கேப்சா குறியீடுகளை டைப்செய்து உறுதி செய்ய வேண்டும்
பின் ஆதாருடன் பான் கார்டு இணைக்கப்பட்டதாக உறுதி தகவல் கிடைக்கும்.