ஆதார் அட்டையில் பெயர் முகவரியை திருத்தம் செய்வது எப்படி?
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் நாட்டிலுள்ள இந்திய குடிமகன்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை இந்தியக் குடியிருப்பாளரின் அனைத்து முக்கியமான தனிப்பட்ட விவரங்களையும் உள்ளடக்கி, 12 இலக்க பிரத்யேக எண்ணை வழங்குகிறது. ஆதார் அட்டையில் ஏதாவது பெயர் மற்றும் முகவரியை மாற்ற எவ்வாறு புதுப்பிப்பது, திருத்துவது எப்படி என்பதை பற்றி பார்ப்போம். புதுப்பிப்பது எப்படி? பெயரில் சிறிய திருத்தங்களுக்கு ( https://ssup.uidai.gov.in/ssup/ ) என்ற பக்கத்திற்க்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில், 'எனது ஆதார்' கீழ்தோன்றும் அம்புக்குறியைக் கிளிக் செய்யவும். 'உங்கள் ஆதாரைப் புதுப்பிக்கவும்' பிரிவின் கீழ், 'புள்ளிவிவரத் தரவைப் புதுப்பித்து நிலையைச் சரிபார்க்கவும்' க்ளிக் செய்யவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
உங்கள் ஆதார் பெயர் மாற்றம், முகவரியை திருத்தம் செய்வது எப்படி?
'சேவை' என்பதன் கீழ், 'பெயர்/பாலினம்/பிறந்த தேதி/முகவரி புதுப்பிப்பு' என்பதைக் கிளிக் செய்து, மாற்றங்களைச் செய்து, சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும். திருத்தம் விண்ணப்பிக்கும் முறை சிறிய பிழைத்திருத்தமாக இல்லாமல் பெயரே மாறியிருக்கும் சூழலில் நேரடியாக ஆதார் மையத்திற்குச் சென்று தான் பெயர் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும். பெயர் திருத்தத்திற்கு பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட நம்முடைய பெயர் மற்றும் புகைப்படத்தைக் கொண்ட அரசு அங்கீகரித்த எந்தவொரு ஆவணத்தையும் கொண்டு செல்லலாம். உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் ஒன்றைப் புதுப்பிக்கிறீர்கள் என்றால், அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு யுஐடிஏஐ ரூ.50 கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செய்ய முடியும்.