பூமியை நெருங்க இருக்கும் "சிட்டி கில்லர்" சிறுகோள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஒரு "சிட்டி கில்லர்" சிறுகோள் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. அந்த சிறுகோள் பூமியில் இருந்து 5.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு தூரத்தில் பூமியை கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு SP1 என பெயரிடப்பட்ட அந்த சிறுகோள், சுமார் 11.79 கிமீ வேகத்தில் பூமியை தாண்டி செல்லும் என்றும், தோராயமாக 244 மீட்டர் அகலத்திற்கு இருக்கும் அந்த சிறுகோள் அமெரிக்க கால்பந்து மைதானத்தின் அளவிற்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின்(ஜேபிஎல்) வலைப்பக்கத்தின்படி, அந்த சிறுகோள் அடுத்ததாக அக்டோபர் 7, 2027 அன்று பூமியை மீண்டும் கடக்கும்.
பூமிக்கு அருகில் உள்ள விண் பொருட்கள்
இந்த அளவிலான சிறுகோள்கள் பூமியை தாக்கினால், ஒரு நகரம் முழுவதும் அழிந்துவிடும் என்பதால் இது போன்ற சிறுகோள்களை "சிட்டி கில்லர்கள்" என்று அழைக்கிறார்கள். ஆனால், இந்த சிறுகோள் மிக சிறியதாக இருப்பதாலும், தோலை தூரத்தில் இருப்பதாலும் இதை தொலைநோக்கி இல்லாமல் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் இதுவரை 34,000 க்கும் மேற்பட்ட பூமிக்கு அருகில் உள்ள விண் பொருட்களை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில், 2,300-க்கும் அதிகமானவை மட்டுமே அபாயகரமானதாகும். ஆனால் இன்னும் பல விண் பொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நாசா சந்தேகிக்கின்றது. ஒரு பெரிய சிறுகோள் பூமியைத் தாக்கும் போக்கில் இருந்தால், அதை அழிக்க அல்லது திசை திருப்ப 5 முதல் 10 ஆண்டுகள் நமக்கு தேவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.