Page Loader
உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன?
417 நிறுவனங்கள் 1.2 லட்சம் ஊழியர்கள் பணிநீக்கம் - அதிர்ச்சி ரிப்போர்ட்

உலகளவில் இரண்டு மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - பின்னணி என்ன?

எழுதியவர் Siranjeevi
Feb 27, 2023
05:32 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் தொழில்நுட்ப மந்தநிலை காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தது. அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் 417 நிறுவனங்கள் உலகளவில் 1.2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால், 2023 ஆம் ஆண்டு தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாக அமைகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஒப்பிடுகையில் 1,046 தொழில்நுட்ப நிறுவனங்கள் 1,61 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக, லேஆஃப்ஸ் டிராக்கிங் தளமான Layoffs.fyi தரவுகள் தெரிவிக்கின்றன. அதுவே, ஜனவரி மாதத்தில் மட்டும், அமேசான் போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்தில், உலகளவில் சுமார் 1 லட்சம் தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

பணிநீக்கம்

இரண்டும் மாதங்களில் 1.2 லட்சம் பேர் பணிநீக்கம் - அதிர்ச்சி ரிப்போர்ட்

மொத்தமாக, கிட்டத்தட்ட 3 லட்சம் தொழில்நுட்ப ஊழியர்கள் இப்போது 2022 மற்றும் 2023 ஆண்டில் பிப்ரவரி வரை வேலை இழந்துள்ளனர். இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு பல் வேறு காரணங்களை நிறுவனங்கள் கூறியிருக்கிறது. அதாவது, கோவிட் 19, பொருளாதார வீழ்ச்சி, எனக்கூறப்படுகிறது. இது எல்லாம் வெறும் தொடக்கம் தான். நாம் இன்னும் நெருக்கடி நிலையில் ஆரம்பக்கட்டத்தை கூட தாண்டவில்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள். எனவே, அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்குள் உலக நெருக்கடி உச்சம் பெற்று லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் என கூறுகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு இது அந்த நாடுகளை விட்டு வெளியேறுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.