உலக வனவிலங்கு தினம் 2023: இந்தியாவின் அழிந்து வரும் வனவிலங்குகள் சில
ஆண்டுதோறும், மார்ச் 3 , உலக வனவிலங்கு தினமாக கொண்டாடப்படுகிறது. உலகில் இருக்கும் அனைத்து விலங்குகளும், நம் வாழ்வின் இன்றியமையாதவை என்பதையும், நம் ஆரோக்கியத்திற்கு அவற்றின் பங்களிப்பையும் கொண்டாடுவதற்கான தினமாக இந்நாளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்நாளில், நம் நாட்டில் உள்ள அழிந்து வரும் வனவிலங்குகள் சிலவற்றை காண்போம் வங்கப்புலி: கடந்த 30 ஆண்டுகளில், இந்த புலி வகை, 50% சரிவைக் கண்டுள்ளது. மற்ற புலி வகைகளை விட, வங்காளப் புலிகள், தனித்துவமான கோடு வடிவத்தைக் கொண்டிருப்பதால், அவற்றை அடையாளம் காணுவது எளிது. எந்த இரண்டு வங்காளப் புலிகளும் ஒரே மாதிரி இருக்காது. இந்திய காட்டு நாய்: இந்திய காட்டு நாய் பொதுவாக இந்தியா, மியான்மர், இந்தோசீனா, இந்தோனேசியா மற்றும் சீனாவின் ஆல்பைன் காடுகளில் காணப்படுகிறது.
நீலகிரி மலைகளில் வாழும் விலங்குகள்
இந்திய பாங்கோலின்: இந்த செதில் எறும்பு விலங்கு மெதுவாக நகரும், இரவு நேர பாலூட்டியாகும். புல்வெளிகள் மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் இவ்வகை விலங்குகள் காணப்படும். அதன் இறைச்சி மற்றும் செதில்களுக்காக வேட்டையாடப்படுவதால் தற்போது, அழிவுநிலையில் உள்ளது. நீலகிரி தஹ்ர்: இவை, நீலகிரி மலைகள் மற்றும் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் உலவும். இது தமிழ்நாட்டின் மாநில விலங்கு. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீலகிரி தஹ்ர் மக்கள்தொகை பற்றிய விரிவான ஆய்வில் 3,122 ஆக உள்ளது. நீலகிரி லங்கூர்: நீலகிரி லங்கூர், நீலகிரி மலைகளில் காணப்படுகிறது. அதோடு, குடகு, மற்றும் கோதையார் மலைகள் மற்றும் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளும் இவை வசிக்கும். மருத்துவ குணங்களுக்காகவும், தோல்களுக்காகவும் அதிகம் வேட்டையாடப்படுகிறது.