Page Loader
அரிய நோய் தினம் 2023: இந்தியாவில் அதிகம் அறியப்படாத சில நோய்கள் இதோ
மரபியல் மாற்றங்களால் நிகழும் அரிய நோய்கள் தினம் இன்று

அரிய நோய் தினம் 2023: இந்தியாவில் அதிகம் அறியப்படாத சில நோய்கள் இதோ

எழுதியவர் Venkatalakshmi V
Feb 28, 2023
01:06 pm

செய்தி முன்னோட்டம்

அரிய நோய் என்பது ஒரு சிறிய சதவீத மக்களை பாதிக்கும் நோயாகும். பெரும்பாலான அரிய நோய்கள், மரபணு சார்ந்தவை. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 1000 மக்களுக்கு ஒருவருக்கு ஏற்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்து அரிய நோய்களிலும், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின், NPRD கொள்கைபடி, சுமார் 80% அரிய நோய்கள் மரபியல் தோற்றம் கொண்டவை என்று நம்பப்படுகிறது, அதே சமயம் 70 சதவீதம் நோய்கள் குழந்தை பருவத்திலேயே தோன்றும். இந்தியாவில் காணப்படும் சில அரிய நோய்கள் இங்கே: Acanthocytosis Chorea: இது அரிய பரம்பரை மரபணு நோயாகும். இந்த நோயால் வலிப்பு, நடத்தை மாற்றங்கள், தசைச் சிதைவு மற்றும் நரம்பியல் சிதைவு போன்றஅறிகுறிகள் தோன்றும்.

அரிய நோய்

குழந்தைகளை பாதிக்கும் ஹைப்பர் இன்சுலினிசம்

அடிசன் நோய்: அடிசன் நோய், அல்லது ஹைபர்கார்டிசோலிசம் என்பது அட்ரீனல் சுரப்பியில் இருக்கும் ஸ்டெராய்டு ஹார்மோன்கள் கோளாறின் காரணமாக ஏற்படும் ஒரு நோயாகும். இந்த நோய் அனைத்து வயதினரையும், இருபாலரையும் பாதிக்கும். இந்தியாவில், இது 100,000 பேரில் ஒருவரை பாதிக்கிறது. ஏஞ்சல்மேன் நோய்: இது ஒரு அரிய மரபணு நரம்பியல்-வளர்ச்சிக் கோளாறாகும். இதனால், கடுமையான வளர்ச்சி தாமதம், தூக்கக் கோளாறுகள் மற்றும் அடிக்கடி சிரிப்பு ஆகியவற்றால் கண்டறியலாம். குரோமோசோம்15-ல் உள்ள இயல்பற்ற தன்மையால் இந்த நோய் ஏற்படுகிறது. மேலும் இது 3-7 வயதிற்குள் தான் கண்டறியப்படுகிறது. பிறவி ஹைப்பர் இன்சுலினிசம்:CHI என்பது கணைய β-செல்களின் ஒரு அரிய மரபணு கோளாறு ஆகும். புதிதாக பிறந்த குழந்தைகளில், அதிக அளவு இன்சுலின் சுரக்கும் நோயாகும்.