உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 ஆம் தேதி, உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் என பலவகை ஆபத்தான புற்றுநோய்கள் இந்நாள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், புற்றுநோய் செல்கள் உருவாக காரணமாகும் காரணிகள் என மருத்துவர்கள் கண்டறிந்தவற்றின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. புகைப்பிடித்தல்: புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமின்றி பலவகையான நோய்களும் தாக்கும் என்பது நிதர்சனம். புகைப்பிடிப்பதால், உங்களின் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. அதனால், பலவித தொற்றுகளும், உங்களை எளிதாக தாக்கும். உடல் பருமன்: புற்றுநோய் உண்டாவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது பருமனான உடல். உடலில் கூடுதல் கொழுப்பு செல்கள் இருப்பதால், அதிக ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் சுரக்கிறது. இவ்விரண்டும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத்தூண்டுகிறது.
தோல் புற்றுநோயை உண்டாக்கும் சூரிய ஒளி
மோசமான உணவு பழக்கம்: மோசமான உணவுப்பழக்கங்கள் புற்றுநோய் அபாயத்தை தூண்டுகிறது. உங்கள் தினசரி உணவில்,காய்கறிகள், பழங்கள், புரத சத்து நிறைந்த தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ்களை குறைக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான சூரிய ஒளி: சூரிய ஒளி நல்லது தான். எனினும், அதிகப்படியான சூரியவொளி, தோல் புற்றுநோயை உண்டாக்கும். குறிப்பாக, மதிய வெயில், சரும பாதிப்புகளுடன், புற்று நோய் உண்டாகும் அபாயத்தையும் அதிகரிக்கும். குடிப்பழக்கம்: குடிப்பழக்கம், உயிரணுக்களை சிதைத்து, புற்றுநோய்க்கு வழிவகுக்கும். குறிப்பாக பெருங்குடலின் செல்கள் பாதிக்கப்படுகின்றது என ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றது. தொற்றுகள்: சிலவகை நோய் தொற்றுகள், உங்களில் உடலில் அழற்சியை ஏற்படுத்தி, நோய்எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் புற்றுநோய் தாக்கத்தின் அபாயம் அதிகரிக்கிறது.