புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் இந்தியாவை தாக்கும் அபாயம்: அமெரிக்கா புற்றுநோயியல் நிபுணர்
உலகமயமாக்கல், வளர்ந்து வரும் பொருளாதாரம், வயதான மக்கள் தொகை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை, போன்றவற்றால் புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்களின் தாக்கத்தை, இந்தியா எதிர்கொள்ள நேரிடும் என்று, அமெரிக்காவின் முன்னணி புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜேம் ஆபிரகாம் எச்சரித்துள்ளார். சுகாதார பேரழிவுகளைத் தடுக்க, தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ நுட்பங்களை இந்தியா முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். புற்றுநோய் தடுப்பு, சிகிச்சைக்கான தடுப்பூசிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் விரிவாக்கம், மற்றும் திரவ பயாப்ஸி மூலம் புற்றுநோயைக் கண்டறிதல் போன்றவை, இந்த நூற்றாண்டில் புற்றுநோய் சிகிச்சையை மாற்றியமைக்க போகும் வழிகளாக கண்டறியப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
டெலிஹெல்த்தில் இந்தியாவின் முன்னேற்றம்
இதோடு, மரபணு விவரக்குறிப்பின் பயன்பாடு, மரபணு எடிட்டிங், நோயெதிர்ப்பு சிகிச்சைகள் மற்றும் CAR T செல் சிகிச்சைகள் ஆகியவையும், புற்றுநோய்க்கு எதிராக போராட உதவும் தொழில்நுட்பங்கள், எனக்கூறுகிறார். இந்தியாவில் உள்ள மருத்துவ முன்னேற்றத்தை குறித்து பேசும் போது, "டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டெலிஹெல்த் ஆகியவை, நோயாளிகளுக்கும், நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும். இது ஒரு நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும், நிபுணர்களின் கவனிப்பு கிடைப்பதை மேம்படுத்தும்." "ஆனால், இந்த தொழில்நுட்பங்களை, புற்றுநோய் சிகிச்சைக்காக, எவ்வாறு மலிவு விலையில் மற்றும் மில்லியன் கணக்கான மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவது, என்பது இந்தியாவின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்", என்று டாக்டர் ஆபிரகாம் குறிப்பிடுகிறார்.