ஜங்க் ஃபுட் முதல் முடி பராமரிப்பு வரை: புற்றுநோயுடன் தொடர்புடைய 6 பொருட்கள்
செய்தி முன்னோட்டம்
அன்றாடம் உண்ணும் உணவுகளில் ஆரம்பித்து சமையல் பொருட்கள் முதல் பவுடர், ஷாம்பூ என்று தினசரி உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்திலும் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சில ரசாயனங்கள் அசாதாரண உயிரணுக்களை உருவாக்குகிறது என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புற்றுநோய் இதனால் தான் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.
இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் மரபியல், வாழ்க்கை முறை, வேலைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை தனிப்பட்ட ஆபத்தை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தொழில்துறை மாசுபாட்டின் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு தயாரிப்புப் பொருட்களிலும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் புற்றுநோயுடன் எவை எல்லாம் தொடர்புடையவை என்பதை பின்வருமாறு பார்ப்போம்.
புற்றுநோய்
புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவு மற்றும் பராமரிப்பு பொருட்கள்
2021-ஆம் ஆண்டில், ஒரு தனியார் ஆய்வகம் ஸ்ப்ரே டியோடரண்டுகள் மற்றும் சன்ஸ்கிரீன்களை பரிசோதித்ததில் அதில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் இருப்பதை கண்டுபிடித்தது.
உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் மார்பக மாற்று சிகிச்சையுடன் சம்பந்தப்பட்ட புற்றுநோய் பற்றிய எச்சரிக்கையை செப்டம்பரில் வெளியிட்டன.
நான்-ஸ்டிக் பாத்திரங்களைத் தயாரிக்க உபயோகிக்கும் ரசாயனங்கள், கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஆண்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
செயற்கை இனிப்புகளினால் மார்பகப் புற்றுநோய் மற்றும் உடல்பருமன் தொடர்பான புற்றுநோய்கள் வரலாம் என PLOS மெடிசினில் வெளியான பிரெஞ்சு ஆய்வு தெரிவிக்கிறது.
கறுப்பினப் பெண்களுக்கு விற்பனை செய்யப்படும் கூந்தல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.